Narain: பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் நரேன்!
Narain About LCU: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நரேன். இவர் ஆரம்பகாலத்தில் முன்னணி ஹீரோவாக நடித்துவந்த நிலையில், தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் முக்கிய அங்கமாக இருந்துவரும் நிலையில், தற்போது பென்ஸ் படத்தில் நடிப்பதை இவர் உறுதி செய்துள்ளளார்.
மலையாள சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நரேன் (Narain). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவருக்கு தமிழில் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai). இந்த படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) கைதி (Kaithi), விக்ரம் (Vikram), போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வெற்றி கொடுத்திருக்கிறார். இவர் லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துவரும் நிலையில், இந்த பட தொகுப்பில் உருவாகும் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
அந்த வகையில், கைதி, விக்ரம் போன்ற படங்ககளை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) மற்றும் நிவின் பாலியின் முன்னணி நடிப்பில் உருவாகும் பென்ஸ் (Benz) படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதை இவர் உறுதி செய்துள்ளார்.




இதையும் படிங்க: சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்
பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் நரேன் :
நடிகர் நரேன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர், ” பென்ஸ் திரைப்படம் LCU பட தொகுப்பில் 4வது திரைப்படமாக உருவகைவருகிறது. இந்த படமானது கைதி 2 படத்திற்கு முன் இணையும் படம் என்பதால, இதில் பல்வேறு மாறுபட்ட கதைக்களத்துடன் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி.. இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?
மேலும் பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இவர் கைதி 1 படத்தின் மூலம் LCU பட தொகுப்பில் இணைந்த நிலையில், தற்போது தொடர்ந்து 3வது முறையாக LCU பட தொகுப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
LCU- குறித்து நடிகர் நரேன் பேசிய வீடியோ பதிவு :
Actor #Narain confirms that #Benz will serve as the fourth entry in the #LCU, hitting screens ahead of #Kaithi2. The film will reportedly feature multiple crossover characters from the universe#LokeshKanagaraj| #RaghavaLawrence
pic.twitter.com/7h3rz0Ul6Q— Movie Tamil (@_MovieTamil) October 29, 2025
நடிகர் நரேனின் புதிய படங்கள் :
நடிகர் நரேன் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது. மேலும் இவர் தளபதி விஜயின் கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவர் அறிவியல் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருபதாக அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக பென்ஸ் மற்றும் கைதி 2 போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.