Mysskin: ட்ரெயின் படத்தில் 2 காட்சிகளுக்காக ரூ 7.5 லட்சம் செலவு பண்ணிருக்கேன்- மிஷ்கின் உடைத்த உண்மை!
Mysskin About Train Movie: தமிழில் பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் தமிழில் பிசாசு 2 மற்றும் ட்ரெயின் போன்ற படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் ட்ரெயின் திரைப்படத்தில் 2 காட்சிகளுக்காக அதிகம் செலவு செய்தது பற்றி மிஷ்கின் ஓபனாக பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் தனது மாறுபட்ட திரைக்கதை மூலம் ரசிகர்கள் கொண்டுள்ளவர் இயக்குநர் மிஷ்கின் (Mysskin). இவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல தமிழில் பிரபல நடிகராகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் (Keerthi Suresh) புதிய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் இந்த திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் தயாராகியிருக்கும் படங்கள்தான் பிசாசு 2 (Pisaasu 2) மற்றும் ட்ரெயின் (Train). இதில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) இணைந்து நடித்திருக்கும் படம்தான் ட்ரெயின்.
இந்த படமானது முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதையை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், இந்த ட்ரெயின் படத்தின் 2 காட்சிகளுக்காக மட்டும் சுமார் ரூ 7. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ
ட்ரெயின் படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைந்தது பற்றி மிஷ்கின் வெளியிட்ட பதிவு :
Train Team heartfully wishes Princess Shruti Haasan a wonderful birthday. #train #trainmovie #vijaysethupathi #mysskin #shrutihaasanhttps://t.co/gaxvo9woPN@VJSethuOfficial @theVcreations@ira_dayanand@Lv_Sri@Shrutzhaasan@nasser_kameela@itsNarain@preethy_karan… pic.twitter.com/7ysHYhwnsi
— Mysskin (@DirectorMysskin) January 27, 2025
ட்ரெயின் படத்தின் 2 காட்சிகளுக்காக அதிகம் செலவு செய்தது பற்றி மிஷ்கின் பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் மிஷ்கின் ட்ரெயின் படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த ட்ரெயின் படத்தின் காட்சிகள் முழுக்க இரயிலின் உள்ளே எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகிலே மிகவும் சிறிய வகையான திரைப்பட கேமராவை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். மேலும் அதற்கான லென்ஸை ஜெர்மனியில் இருந்து வாங்க்கியிருந்தோம். இந்த படத்தின் காட்சிகளை திணறாமல், இருக்கும் இடத்தில் இருந்தே எடுப்பதற்காக இந்த கேமராவை நாங்கள் வாங்கியிருந்தோம். சாதாரண காட்சிகளை அந்த கேமராவை வைத்து எங்களின் கையால் எடுத்துவிடும்.
இதையும் படிங்க: ஒரே டாக்ஸிக்கா இருக்கு பிக்பாஸ்… பார்வதியின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!
மேலும் கொஞ்சம் வித்தியாசமான காட்சியை எவ்வாறு எடுக்கலாமா என்பதை யோசித்தபோது, அந்த இரயிலின் உள்ளே கேமராவை டிராலி மூலம் நகர்த்துவது போன்ற காட்சியை வைக்க நினைத்தோம். அதற்காக பல விஷயங்களையும் நாங்கள் செய்தோம். படத்தில் இந்த வித்தியாசமான முறையில் இந்த 2 காட்சிகள் மட்டுமே எடுத்தேன். அந்த இரண்டு காட்சிகளுக்கும் மட்டுமே சுமார் ரூ 7.5 லட்சம் செலவானது” என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.