Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே டாக்ஸிக்கா இருக்கு பிக்பாஸ்… பார்வதியின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக போட்டியாளர் பார்வதியின் செயல் ரசிகர்களிடையே தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே டாக்ஸிக்கா இருக்கு பிக்பாஸ்… பார்வதியின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2025 15:48 PM IST

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முதல் சீசனில் இருந்து 8-வது சீசன் வரை ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 3 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 4-வது வாரம் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரத்திற்கான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வீட்டு தலையாக பிரவீன் வெற்றிப்பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷனில் வினோத், கம்ருதின், அரோரா, கலையரசன், பார்வதி என 5 பேர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் போட்டியை விட்டு வெளியேற உள்ளார்கள் என்பது குறித்து வார இறுதியில் தெரியவரும். தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்த போட்டியாளர்களில் ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் ரசிகர்களுக்கு டாக்ஸிக்காக இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று கனி.. இன்று வினோத் – தொடர்கிறது பார்வதியின் சண்டை லிஸ்ட்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு போட்டியாளர் பார்வதி மட்டும் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இது குறித்து வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினாலும் அடுத்த நாளே அதனைத் தொடர்கிறார். அதன்படி இந்த வாரம் தொடங்கிய நேற்று திங்கள் அன்று கனி உடன் பார்வதி சண்டையிட்டார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவைப் பார்க்கும் போது வீட்டில் உள்ள மற்றோரு போட்டியாளருடன் சண்டையிடுவது தெரிகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பார்வதியை பிக்பாஸ் வீட்டிற்குள் பார்ப்பதற்கே டாக்ஸிக்காக உள்ளது. அவரின் செயலை தொடர்ந்து பார்க்கையில் எரிச்சல் மூட்டுவதாக உள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்… வைரலாகும் அப்டேட்