Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் – நிவாஸ் கே பிரசன்னா

Music Composer Nivas K Prasanna: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது குறித்தும் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது குறித்தும் நிவாஸ் பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் – நிவாஸ் கே பிரசன்னா
நிவாஸ் கே பிரசன்னாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2025 12:51 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் ரமேஷ் இயக்கத்தில் வெளியான படம் தெகிடி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா (Nivas K Prasanna). இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவில் இசையில் வெளியான சேதுபதி, ஜீரோ, கூட்டத்தில் ஒருத்தன், தேவராட்டம்,புத்தம் புது காலை, கோடியில் ஒருவன், ஓ மை டாக், வட்டம், செம்பி, யாதும் ஊரே யாவரும் கேளிர், டக்கர், எமக்கு தொழில் ரொமான்ஸ், சுமோ, பன் பட்டர் ஜாம் மற்றும் இறுதியாக பைசன் காளமாடன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து இவரது இசையில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தாலும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு இந்த தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரின் பாடல்கள் அனைத்தும் அண்டர் ரேட்டராக இருப்பதாக தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இறுதியாக பைசன் காளமாடன் படத்தில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம்:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் என்னை இசையமைப்பாளராக தேர்வு செய்ததற்காக மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்தார். சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிவிட்டு என்னுடன் கூட்டணி வைத்தார். நான் உண்மையாவே நல்ல இசையமைச்சுட்டு இருந்தேன், ஆனா என் படங்கள் சரியா போகல, என் வேலைகள் எல்லாம் போய் சேரல. பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரியல் ஜோடி பிரஜின் மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் நிவாஸ் பேசிய வீடியோ:

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!