Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bison: தென்னாடு தேசத்துல வாழும் கூட்டம்… பைசன் பட தென்னாடு என்ற பாடல் வெளியானது!

Bison Movie Thennadu Song: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துருவ் விக்ரம். இவரின் முன்னணி நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம்தான் பைசன் காளமாடன். இந்த படமானது 2025 தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இப்படத்திலிருந்து தென்னாடு என்ற பாடலானது வெளியாகியுள்ளது.

Bison: தென்னாடு தேசத்துல வாழும் கூட்டம்… பைசன் பட தென்னாடு என்ற பாடல் வெளியானது!
பைசன் பட பாடல்
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2025 23:43 PM IST

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram)  மகன் தான் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகமான நிலையில், தற்போது தனது தந்தையை போல இவரும் சினிமாவில் ஹீரோவாக கலக்கிவருகிறார். அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் 4வதாக தயாராகியுள்ள படம்தான் பைசன் காளமாடன் (Bison: Kaalamaadan). இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) எழுதி இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டநிலையில், மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கிவந்தார். இந்நிலையில், அந்த படமானது வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றநிலையில், அதைத் தொடர்ந்து இந்த பைசன் படத்தை இயக்கிவந்தார்.

இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில்தான் முதன்முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து “தென்னாடு” (Thennadu ) என்ற 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகபரவி வருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் பங்கேற்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்? யார் யார் தெரியுமா?

துருவ் விக்ரமின் பைசன் படக்குழு வெளியிட்ட தென்னாடு பாடல் பதிவு:

இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க, நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திலிருந்து இதுவரைக்கு கிட்டத்தட்ட 3 பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று 2025 அக்டோபர் 2ம் தேதியில் விஜயதசமியை முன்னிட்டு 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : புதிய அணியுடன் அஜித்.. ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பு

இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் நடிகர்கள் பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அனுபமா பரமேஸ்வரன், ஹரி கிருஷ்ணன் மற்றும் கலையரசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

துருவ் விக்ரமின் பைசன் பட கதைக்களம் :

இந்த பைசன் படமானது உண்மையான கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கபடி, காதல்  என மாறுபட்டகதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இந்த படமானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.