Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மம்மூட்டி – மோகன்லாலின் ஆக்ஷ்ன் கூட்டணி – பேட்ரியாட் டைட்டில் டீசர் வெளியானது!

Mammootty And Mohanlal Movie Title Teaser: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பேட்ரியாட். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் நிலையில், இன்று இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

மம்மூட்டி – மோகன்லாலின் ஆக்ஷ்ன் கூட்டணி – பேட்ரியாட் டைட்டில் டீசர் வெளியானது!
மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆக்ஷ்ன் கூட்டணி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2025 15:42 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்களிடையே பிரபல சினிமாத்துறையாக இருந்து வருவது மலையாளம் சினிமாதான் (Malayalam cinema). சூப்பர் ஹீரோ படங்கள் முதல் வித்தியாசமான கதை கொண்ட படங்கள் வரை, மலையாள சினிமாவில் வெளியாகாத கதையே கிடையாது என்று கூறலாம். இப்படிப்பட்ட மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் மம்மூட்டி (Mammootty) மற்றும் மோகன்லால் (Mohanlal). இவரின் இருவரின் கூட்டணியில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இவர்கள் இருவரும் இயக்குநர் மகேஷ் நாராயணன் (Mahesh Narayanan) இயக்கத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்த படமானது ஆரம்பத்தில் “MMMN” என அழைக்கப்பட்டுவந்த நிலையில், இன்று 2025 அக்டோபர் 2ம் தேதியில் விஜயதசமியை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழு “பேட்ரியாட்” (Patriot) என டைட்டிலை வைத்துள்ளது. இந்நிலையில், அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில், தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: STR49 படம் வட சென்னை 2 இல்ல.. வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!

மம்முட்டி வெளியிட்ட பேட்ரியாட் படத்தின் டைட்டில் டீசர் பதிவு :

இந்த பேட்ரியாட் திரைப்படத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி முக்கிய வேடத்தில் நடிக்க, அவர்களுடன் நடிகர்கள் ஃபகத் பாசில், நயன்தாரா, ரேவதி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் நிலையில், அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகிவருகிறது.

இதையும் படிங்க: கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் நாயகன் படம்!

இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார், மேலும் நடிகர் மோகன்லால் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த பேட்ரியாட் திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. தற்போது வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

பேட்ரியாட் திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட கமல்ஹாசன் :

இந்த பேட்ரியாட் திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட கமல்ஹாசன், இதை வெளியிடுவதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிப்பதில் எவ்வாறு ஆர்வமாக இருக்கிறோமோ, அதுபோல மலையாள சினிமாவில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் இந்த பேட்ரியாட் பட டீசர் மீது அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.