Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bigg Boss 9 Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் பங்கேற்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்? யார் யார் தெரியுமா?

Instagram Celebrities In Bigg Boss 9 Tamil: இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது பிக்பாஸ். தமிழில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலரும் பங்கேற்பதாக தகவல்கள் வைரலாகிவருகிறது அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Bigg Boss 9 Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் பங்கேற்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்? யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 9 தமிழ் பங்கேற்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2025 17:39 PM IST

,கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan)  தொகுத்து வழங்கி வந்த  ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் இந்தி மொழியில் கடந்த 2006ம் ஆண்டும் முதல் தொடங்கிய நிலையில், தமிழில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருந்தது. கடந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.  சினிமா, அரசியல் போன்ற விஷயங்களில் கமல்ஹாசன் பிஸியான நிலையில், அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். மேலும் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 8 முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் இந்த 2025ம் ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் புகழ் பிரபலங்கள் (Instagram famous celebrities) சிலரும் பங்குபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அவர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: புதிய அணியுடன் அஜித்.. ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பு

பிக்பாஸ் சீசன் தமிழில் பங்குபெறும் இஸ்டாகிராம் பிரபலங்கள் லிஸ்ட் :

இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் வரும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், பல்வேறு போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளனர். அதிலும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலரும் பங்குபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் அம்மனாக நயன்தாரா.. மூக்குத்தி அம்மன் 2 போஸ்டர் ரிலீஸ்!

அதன்படி, இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் ஹார்ட் பீட் வெப் தொடரின் நடிகரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ரோஷன் என்பவர் பங்கேற்கவுள்ளாராம். மேலும் வி.ஜே. பார்வதி மற்றும் பிரபல மாடல் அரோரா சின்க்ளேர் போன்ற பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இன்னும் 3 நாட்களில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், அதன் பிறகு இது உண்மையா என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரோரா சின்க்ளேரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த சீசனானது மற்ற சீசன்களை ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் ப்ரோமோ வெளியாகி மேலும் ரசிகர்களை ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.