இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு BMW காரை பரிசளித்த டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர்
Director Abishan Jeevinth: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமி. இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பாளர் BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற சிறிய பட்ஜெட் படங்களில் ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே அபிஷன் ஜீவிந்திற்கு இவரை தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்திற்கும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, பகவதி பெருமாள், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகன், ராம்குமார் பிரசன்னா, அபிஷன் ஜீவிந்த், சௌந்தர்யா சரவணன், யோகலட்சுமி, பொற்கொடி செந்தில், சுதர்சன் காந்தி, அஜித் கோஷி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பொருளாதாரா சிக்கல் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக வந்த குடும்பத்தின் கதையை காமெடி கலந்த செண்டிமெண்டாக இயக்குநர் இந்தப் படத்தில் காட்டியிருப்பார்.
அபிஷன் ஜீவிந்திற்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர்:
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் நஸரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவரது நீண்ட நாள் தோழியை வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இதற்காக டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் BMW கார் ஒன்றை அபிஷன் ஜீவிந்திற்கு பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஒரே டாக்ஸிக்கா இருக்கு பிக்பாஸ்… பார்வதியின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Producer of #TouristFamily has gifted a BMW car to Director/Actor #Abishan as a wedding present. His marriage is scheduled on Oct 31st ♥️✨ pic.twitter.com/IiLsAvfW9t
— AmuthaBharathi (@CinemaWithAB) October 28, 2025
Also Read… தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!



