Pa Ranjith: டியூட் பட இயக்குநர் வெச்சி செஞ்சிட்டாரு எல்லாரையும்.. பா. ரஞ்சித்!
Pa.Ranjith Criticizes Keerthiswaran: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் பா.ரஞ்சித். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் பைசன். இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், டியூட் திரைப்படம் மற்றும் அதன் இயக்குநரை குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், மக்களிடையே பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா.ரஞ்சித் (Pa. Ranjith). இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் தங்கலான் (Thangalaan). இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) முன்னணி நாயகனாக நடிக்க இவருடன் பார்வதி திருவோத்து இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் வேட்டுவம் (Vettuvam) என்ற திரைப்படமானது உருவாகி வருகிறது. இதில் ஆர்யா (Arya) மற்றும் அட்டகத்தி தினேஷ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பிலும், மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்திலும் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விழாவில் பேசிய பா. ரஞ்சித், டியூட் (Dude) பட இயக்குநர் கீர்த்திஸ்வரனை (Keerthishwaran) பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்
டியூட் பட இயக்குநரை பாராட்டி பா. ரஞ்சித் பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், டியூட் படத்தையும் பாராட்டியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் “பைசன் திரைப்படம் மினவும் ஸ்ட்ராங்கான கதையாக இருக்கும் ஜாலியாக இருக்காதது என எல்லாருமே டியூட் திரைப்படத்திற்கு போங்க என்று நிறையபேர் சொன்னங்க, கடைசில டியூட் பட இயக்குநர் எல்லாரையும் வெச்சி செஞ்சிட்டாரு. உண்மையிலே ரொம்ப சந்தோசமாகாதான் இருக்கிறது. அதன்படி டியூட் படத்தில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆணவ கொலையை எதிர்த்து பேசியதற்கு பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்.. பிரதீப் ரங்கநாதனை வாழ்த்திய டியூட் படக்குழு!
மேலும் மாரி செல்வராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படத்தை கொடுத்திருக்காரு, மேலும் தொடர்ந்து மக்களுக்கு நெருக்கமான திரைப்படங்களை கொடுத்துடுவராரு என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டியூட் பட இயக்குநரை பாராட்டி பா.ரஞ்சித் பேசிய வீடியோ பதிவு :
“#Bison Thappana padam nu ninachu #Dude ku ponavangala Director Keerthiswaran vachu senjutaru”
– #PaRanjith pic.twitter.com/hV3BBWzQGj— AmuthaBharathi (@CinemaWithAB) October 25, 2025
டியூட் திரைப்படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது பைசன், டீசல் போன்ற படங்களுடன் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது வெளியாகி சில நாட்களுக்கு கலவையான விமர்சனங்களை பெற்றவந்தாலும், சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.