Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி.. இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?

Rajinikanth Retirement: தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கூலி படமானது வெளியான நிலையில், தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், இந்த படம்தான் ரஜினிகாந்தின் இறுதி படம் என கூறப்படுகிறது.

Rajinikanth: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி.. இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Oct 2025 22:11 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கிவருகிறார். இந்த படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan), யோகி பாபு (Yogi Babu) , மிர்னா மேனன் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து புதிய படங்களுக்கான கதையையும் கேட்டுவருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர் 2 படத்திற்கு பின் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் ஒரு படமும், கமல்ஹாசனுடன் (Kamal Haasan) கூட்டணியில் ஒரு படமும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படங்களை அடுத்ததாக ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் கார்த்தி.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா?

சினிமாவை விட்டு விலகுகிறாரா ரஜினிகாந்த் :

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி உடன் ரஜினிகாந்த் இணையும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக கூறும் நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிப்பதாவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:  டியூட் படத்தில் அந்த காட்சியெல்லாம் தூக்கிட்டேன்.. காரணம் இதுதான் – கீர்த்திஸ்வரன்!

இந்த படமானது வரும் 2027ம் ஆண்டில் உருவாகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தை அடுத்ததாக ரஜினிகாந்த் முழுமையாக சினிமாவை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பற்ற ரஜினிகாந்தின் தரப்பில் எந்த வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் பற்றி படக்குழு வெளியிட்ட பதிவு :

ரஜினிகாந்தி ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவைடந்ததாக கூறப்படும் நிலையில், கோவாவில் முழுமையாக நிறைவடையும் என வட்டாரங்கள் கூறுகிறது. இது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.