ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்… வைரலாகும் தகவல்
Music Director Anirudh: பான் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வரும் இவர் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெளியான 3 படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்தப் படத்தின் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பான் இந்திய அளவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் பலர் தங்களது படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று வரிசையில் காத்திருப்பது வலக்கமாக உள்ளது. மேலும் இவரது இசையில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் விடாமுயற்சி, கூலி மற்றும் மதராசி ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் குமார், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படங்களில் அனைத்தும் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்குமார் படங்களுக்கு ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார்.




ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்:
இந்த நிலையில் நடிகர் விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் பணிகளில் அனிருத் பிசியாக பணியாற்றி வருகின்ற நிலையில் அடுத்ததாக அஜித் குமாரின் 64-வது படத்தில் பணியாற்றி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு அனிருத் பணியாற்றி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதன் காரணமாக அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களிலும் அனிருத் ஒரே நேரத்தில் பணியாற்றி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… இதுதான் லவ்வுனு நம்ப வைக்கனும்… ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Anirudh is working on both #JanaNayagan First Single & #AK64 Announcement Promo…🔥
OG’s Sambavam Loading…⏳️, #ThalapathyVijay & #AjithKumar…❤️🔥 pic.twitter.com/YlAeo43Yyn
— Movie Tamil (@_MovieTamil) October 29, 2025
Also Read… ஜெயிலர் 2 படத்தின் மூலம் காமெடியில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்