9 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் காஸ்மோரா படம் – கொண்டாடும் படக்குழு
9 Years Of Kaashmora Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான காஷ்மோரா 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
 
                                தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி (Actor Karthi). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார் படம். இந்தப் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற காஷ்மோரா படம் தற்போது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி அக்டோபர் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் கோகுல் இந்தப் படத்தை எழுதி இயக்கிய இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக், சரத் லோஹிதஸ்வா, சையத், மதுசூதன ராவ், பட்டிமன்றம் ராஜா, சரவண சுப்பையா, முருகானந்தம், ஜாங்கிரி மதுமிதா, சித்தார்த் விபின், வினோத் முன்னா, டேவிட் சாலமன் ராஜா, முக்தர் கான், அஜய் கோஷ், அறந்தை ராஜகோபால், ராஜு சுந்தரம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




9 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் காஸ்மோரா படம்:
இந்த காஷ்மோரா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!
காஸ்மோரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating 9 epic years of #Kaashmora, where history met horror with grandeur.
A dark fantasy that broke boundaries and redefined spectacle!🔥#9YearsOfKaashmora@Karthi_Offl #Nayanthara #SriDivya @DirectorGokul @Music_Santhosh #Rajeevan @omdop @EditorSabu @anbariv… pic.twitter.com/oJ3mvb81Dt
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 28, 2025
Also Read… ஒரே டாக்ஸிக்கா இருக்கு பிக்பாஸ்… பார்வதியின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    