Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதுதான் லவ்வுனு நம்ப வைக்கனும்… ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் இதோ

Aaromaley Movie Trailer : நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரோமலே. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே படத்தின் மீதனா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதுதான் லவ்வுனு நம்ப வைக்கனும்… ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் இதோ
ஆரோமலே
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2025 19:00 PM IST

90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் ஆனந்தம். இந்த சீரியலில் வில்லியாக மிரட்டியவர் நடிகை பிருந்தா தாஸ். இவரின் ஒரே மகன் தான் நடிகர் கிஷன் தாஸ். அம்மா வில்லியாக மிரட்டிய நிலையில் மகன் நாயகனாக கலக்கி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் கிஷன் தாஸ் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் டர்புகா சிவா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கிஷன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் மீத்தா ரகுநாத், கௌதம் சிஎஸ்வி, ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், வருண் ராஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  இதனைத் தொடர்ந்து கிஷன் தாஸ் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாக உள்ள ஆரோமலே படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் வெளியானது:

நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சாரங் தியாகு இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கிஷன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், விடிவி கணேஷ், துளசி, சிபி சக்ரவர்த்தி, நம்ரிதா எம்வி, சந்தியா வின்ஃப்ரெட் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ள நிலையில் ட்ரெய்லரில் நடிகர் சிலம்பரசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!

ஆரோமலே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ