Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

Abishan Jeevinth and Anaswara Rajan: இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக நடித்து வருகிறார் அபிஷன் ஜீவிந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிரபல நிறுவனம் ஓடிடி வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
அபிஷன் - அனஸ்வராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2025 15:19 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் முன்னணி வேடத்தில் நடித்த இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth) இயக்கி இருந்தார். இந்தப் படம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வந்தனர். அறிமுகம் ஆன முதல் படமே அபிஷன் ஜீவிந்தை தென்னிந்திய சினிமாவில் நல்ல பிரபலம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி தொடர்ந்து வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்த செய்தி உண்மையா பொய்யா என்று விவாதங்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வந்த நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தப் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு உதவி இயக்குநராக பணியற்றிய மதன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம்  இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற நெட்ஃபிளிக்ஸ்:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது குறித்து படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரியல் ஜோடி பிரஜின் மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!