Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கருப்பு பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. எத்தனை கோடிகளுக்கு விற்பனையானது தெரியுமா?

Karuppu Overseas Rights: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கருப்பு. இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தில் இருந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாடுகள் ரிலீஸ் உரிமையை பிரபலம் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கருப்பு பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. எத்தனை கோடிகளுக்கு விற்பனையானது தெரியுமா?
கருப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2025 21:04 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின்  நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை அடுத்ததாக சூர்யா நாயகனாக நடித்து மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவந்த படம்தான் கருப்பு (karuppu). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாறுபட்ட வேடத்தில் நடிக்க, இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கியுள்ளார். இந்த படமானது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்களின் ஜோடி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் மீண்டும் கருப்பு படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (sai Abhyankkar) இசையமைத்துவரும் நிலையில், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கருப்பு படத்தின் வெளிநாடுகள் ரிலீஸ் உரிமையை “Phars Film” என்ற நிறுவனமானது பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் தகவல்

கருப்பு திரைப்படத்தின் வெளிநாடு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம் குறித்து வெளியான பதிவு :

கருப்பு படத்தின் வெளிநாடு ரிலீஸ் உரிமை எத்தனை கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா :

நடிகர் சூர்யாவின் 45வது படமாக இந்த கருப்பு திரைப்படமானது உருவாகிவருகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களிலே, இந்த படமானது முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அவர் ரெட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா உடன் இனைந்து நடிகர்கள் யோகி பாபு, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மம்முட்டியின் கன்னூர் ஸ்குவார்ட் படத்தை புகழ்ந்து பேசிய விஷ்ணு விஷால்

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் Phars Film என்ற நிறுவனமானது இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்த நிறுவனமானது சுமார் ரூ 30 முதல் 35 கோடிகள் கொடுத்து இந்த கருப்பு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த கருப்பு படமானது 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், முதல் பாடல் மட்டுமே வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இப்படம் 2026ம் ஆனது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என வட்டாரங்கள் கூறிவந்தன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை விரைவாக விற்கப்பட்டுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த கருப்பு படமானது வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இப்படம் வெளியானால் விஜயின் ஜன நாயகன் படத்திற்கு அடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.