Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியானது ‘GOD MODE’ லிரிக்கள் வீடியோ!

God Mode Lyric Video | நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து முதல் பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியானது ‘GOD MODE’ லிரிக்கள் வீடியோ!
சூர்யா
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Oct 2025 17:46 PM IST

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது 45-வது படமாக உருவாகியுள்ளது கருப்பு. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த கருப்பு படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது. அதன்படி படத்தின் தயாரிப்பாளர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது படம் நிச்சயமாக பண்டிகை காலத்தில் தான் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். அவர் கூறியபோது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் சில போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தால் கருப்பு படம் தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாகும் என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அறிவித்து இருந்தார்.

கருப்பு படத்திலிருந்து வெளியானது ‘GOD MODE’ லிரிக்கள் வீடியோ:

இந்த நிலையில் இந்த கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். அதன்படி இந்த கருப்பு படத்தில் இருந்து இன்று 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்னென்ன புது வரவு – லிஸ்ட் இதோ

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்