ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்
Karuppu Movie Release Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வேலைகள் முடிவடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்து இருந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான ரெட்ரோ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் இருந்து பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட்ரோ படத்தின் பாடல்களும் ரசிகர்களால் ரீ கிரியேட் செய்யப்பட்டு தொடர்ந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2026-ம் ஆண்டு திரைக்கு வரும் கருப்பு படம்:
இந்த நிலையில் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் தீபாவளிக்கு கருப்பு வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இந்தப் படம் வருகின்ற 26-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்… மாரி செல்வராஜ் சொன்ன விசயம்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தளப் பதிவு:
#Suriya‘s #Karuppu Planning for Jan 23 release 🔥
Long Holiday weekend as Republic day coming on Monday👌
©️VP pic.twitter.com/n5sFcRzznk— AmuthaBharathi (@CinemaWithAB) October 30, 2025
Also Read… ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்… வைரலாகும் தகவல்



