Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mari Selvaraj: நடிகர் என்பது ஒரு அருவருப்பான வேலை.. மறைமுகமாக பிரபல நடிகரை தாக்கிய மாரி செல்வராஜ்!

Mari Selvaraj About Acting in Movie: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதுவரை குறைவான படங்களே வெளியானாலும், அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

Mari Selvaraj: நடிகர் என்பது ஒரு அருவருப்பான வேலை.. மறைமுகமாக பிரபல நடிகரை தாக்கிய மாரி செல்வராஜ்!
மாரி செல்வராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2025 20:10 PM IST

தமிழ் சினிமாவில் கதிர் (kathir) மற்றும் கயல் ஆனந்தியின் (kayal Anandhi) நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம்தான் பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal). கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). தான் இயக்கிய முதல் படத்தின் மூலமாகவே மக்களிடையே நெருக்கமான இடத்தை பிடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்திருந்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 2வது படத்திலே நடிகர் தனுஷுடன் (Dhanush) இணைந்திருந்தார். இந்த படமானது இவருக்கு மேலும் பிரபலத்தை கொடுத்தது, தொடர்ந்து மாமன்னன் (Maamannan), வாழை (Vazhai) போன்ற ஹிட் படங்களையும் இயக்கினார். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). நடிகர் துருவ் விக்ரம் (Dhurv Vikram) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்திருந்தனர்.

கபடி தொடர்பான கதைக்களத்தில் வெளியான இப்படம், பிரம்மாண்ட வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், தான் ஏன் படங்களில் நடிக்கவில்லை என்ற காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பாலிவுட் நடிகை.. அட இவரா?

சினிமாவில் படங்களில் நடிக்காத காரணம் பற்றி பேசிய மாரி செல்வராஜ்:

அந்த நேர்காணலில் மாரி செல்வராஜிடம் தொகுப்பாளர் , “நீங்கள் ஏன் நீங்கள் இயக்கும் படத்தில் நடிக்கவில்லை, அதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், ” நான் நடிக்கமாட்டேன். இப்போது நான் நடிகனாக படங்களில் நடிக்கவென்றுமென்றால், என் பின்னாடி என்னவென்று கேட்காமல் வரும் ஒரு கூட்டத்தை உருவாக்கவேண்டியது இருக்கும். அது ரொம்ப அவசியமில்லாத வேலை. அது ரொம்ப அருவருப்பான வேலையாக பார்க்கிறேன். நடிகர் என்பதற்காக உங்களின் பின்னல் உயிரை கொடுக்கும் அளவிற்கு எந்தவித ஆட்களும் தேவை இல்லை.

இதையும் படிங்க: பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்… மாரி செல்வராஜ் சொன்ன விசயம்

அதனாலே நடிப்பின் மீது ஒரு தவிர்ப்பதற்கு காரணமென்றால், நடித்தாலே ஒரு பார்வையாக மக்கள் பார்க்கிறார்கள். ஒரு நடிகன் என்றால் அதற்கு ஒரு பார்வை கிடைக்கிறது, அதற்கு பெரிய மோகம் கிடைக்கிறது. அவர் ஒரு நடிகர் என்று அவரை பின்தொடர பல நபர்கள் கிடைக்கிறார்கள். நடித்துவிட்டால் சுலபமாக கடவுளாகிவிடலாம் என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது எனக்கு தேவையில்லை, எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது” என அவர் அதில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நேர்காணலில் மறைமுகமாக தளபதி விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பைசன் திரைப்படத்தை இயக்குநர் மரணிரத்னம் பாராட்டியாக மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு :

பைசன் படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை அரசியல்வாதிகள் முதல் பிரபலங்ககள் பலரும் பாராட்டிவருகின்றனர். அந்த வகையில் தமிழ் முன்னணி இயக்குநர் மணிரத்னமும் பாராட்டியுள்ளார். இது தொடர்பான தகவலை மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.