Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishnu Vishal: விரைவில் ஆர்யன் படம் ரிலீஸ்.. ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஷ்ணு விஷால்!

Vishnu Vishal Aaryan Spoiler Warning: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் படம்தான் ஆர்யன். இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அதை செய்யவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து நடிகர் விஷ்ணு விஷால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vishnu Vishal: விரைவில் ஆர்யன் படம் ரிலீஸ்.. ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2025 19:11 PM IST

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby). இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்திருந்த நிலையில், முன்னணி நாயகனாக அவரின் சகோதரன் ருத்ரா (Rudra) என்பவர் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மிக முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் முற்றிலும் ஆக்ஷன் மற்றும் சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் ஆர்யன் (Aaryan). இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்க, விஷ்ணு விஷால்தான் தயாரித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) நடித்துள்ளார்.

இதில் செல்வராகவன் (Selvaraghavan) வில்லனாக நடித்திருக்கும் நிலையில், ஹை பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படம் வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான பிறகு ரசிகர்கள் படத்தின் கதை பற்றிய பதிவுகள் மற்றும் ஸ்பாய்லர்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ பதிவு :

இந்த ஆர்யன் திரைப்படத்தை பார்த்தபிறகு, ரசிகர்கள் எந்தவித ஸ்பாய்லர்களையும் இணைத்தளங்களில் வெளியிடவேண்டாம் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த செய்தியானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ராட்சசன் படத்திற்கு பின் விஷ்ணு விஷால் வெற்றிப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படங்கள் :

இந்த ஆர்யன் படத்தை அடுத்தாக, விஷ்ணு விஷாலின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒன்றுதான் இரண்டு வானம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இதையும் படிங்க: பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் – நிவாஸ் கே பிரசன்னா

இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடிந்திருக்கும் நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்துவருகிறார். மேலும் ராட்சசன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.