மோகன்லாலின் மகள் நாயகியாகும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது
Mohanlal's daughter Vismaya: மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது மகன் முன்னதாக சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நிலையில் தற்போது மோகன்லாலின் மகளும் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லா (Mohanlal). மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இளம் தலை முறையினர் பலர் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு போட்டியாக தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது மகன் பிரணவ் மோகன்லால் முன்னதாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள டைஸ் எரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் தனது மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மோகன்லாலின் மகனும் பிரணவ் மோகன்லாலின் தங்கையுமான விஸ்மயா மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். அதன்படி கடந்த ஜூலை மாதம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இன்று விஸ்மயா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அது தொடர்பாக மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




விஸ்மயா நாயகியாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது:
அந்தப் பதிவில் நடிகர் மோகன்லால் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு துடக்கம் உண்டு… இந்த பயணம் எங்கள் இதயங்களை பெருமையாலும் அன்பாலும் நிரப்புகிறது. பெற்றோர்களாக, எங்கள் மாயா இந்தப் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைப்பதைப் பார்ப்பது நாங்கள் எப்போதும் நெருக்கமாக வைத்திருக்கும் ஒரு தருணம்.
தொடர்ந்து ஊக்கமளிக்கும் பார்வை கொண்ட ஜூட் அந்தனி ஜோசப் மற்றும் எங்கள் அன்பான நண்பரும் இந்தப் படத்தின் பின்னால் உள்ள வழிகாட்டும் சக்தியுமான ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த அற்புதமான பயணத்தில் ஆஷிஷ் ஜோ ஆண்டனி இணைவது ஒரு சிறப்பு ஆசீர்வாதம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உண்மையிலேயே அழகான ஒன்றின் தொடக்கமாக துடக்கம் அமையட்டும் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every journey has its Thudakkam… and this one fills our hearts with pride and love. ❤️
As parents, seeing our Maya step into this new chapter is a moment we will always hold close.Our heartfelt wishes to Jude Anthany Joseph, whose vision continues to inspire, and to Antony… pic.twitter.com/LGqmR9QLnG
— Mohanlal (@Mohanlal) October 30, 2025
Also Read… லோகா முதல் மதுரம் ஜீவாமிருதபிந்து வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மலையாளப் படங்கள்!