லோகா முதல் மதுரம் ஜீவாமிருதபிந்து வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மலையாளப் படங்கள்!
What to Watch: பான் இந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது போல ஓடிடியிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அதே போல மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து அப்டேட்களை தற்போது பார்க்கலாம்.
லோகா சாப்டர் 1 சந்திரா: மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் அருண் டாம்னிக் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூபாய் 300 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை செய்ததாக சாதனைப் படைத்தது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லோகா சாப்டர் 1 சந்திரா படத்தின் ட்ரெய்லர் இதோ:
அஞ்சாம் வேதம்: இயக்குநர் முஜீப் டி முகமது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் அஞ்சாம் வேதம். இந்தப் படத்தில் நடிகர்கள் விஹான் விஷ்ணு, அமர்நாத் ஹரிச்சந்திரன், சுனு லட்சுமி, சஜித் ராஜ், பினீஷ் ராஜ், சௌமியா ராஜ் என பலர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த 25-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
அஞ்சாம் வேதம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… பிக்பாஸில் வீட்டுதல பிரவீன் – திவாகர் இடையே கைகலப்பு… என்ன நடந்தது?
மதுரம் ஜீவாம்ருதபிந்து: நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மதுரம் ஜீவாம்ருதபிந்து. இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் லால், தயானா ஹம்மது, வஃபா கதீஜா, புண்யா எலிசபெத், வினய் கோட்டை, ஜாபர் இடுக்கி, சைஜு குருப், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் சாய்னா ப்ளே ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரம் ஜீவாம்ருதபிந்து படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… இதுதான் லவ்வுனு நம்ப வைக்கனும்… ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் இதோ



