பிக்பாஸில் வீட்டுதல பிரவீன் – திவாகர் இடையே கைகலப்பு… என்ன நடந்தது?
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவிற்கு தினமும் சண்டைகள் நடைப்பெற்றே வருகின்றது. அதன்படி இன்று பிக்பாஸ் வீட்டு தல பிரவீன் மற்றும் திவாகர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் திவாகர், எஃப்ஜே, அரோரா, விஜே பார்வதி, சபரிநாதன், துஷார், கனி திரு, பிரவீன் காந்தி, ஆதிரை, கெமி, ரம்யா ஜோ, வியானா, கானா வினோத், சுபிக்ஷா குமார், அப்சரா, பிரவீன் ராஜ் தேவ், கம்ருதின், கலையரசன், நந்தினி என 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். இதில் உடல் நலக்குறைவு காரணமாக முதல் வாரம் முடிவதற்கு முன்பே நந்தினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து முதல் வார எவிக்ஷனில் இயக்குநர் பிரவின் காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டாவது வாரம் அப்சரா மற்றும் மூன்றாவது வாரம் ஆதிரை ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது 4-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டு தல டாஸ்கில் வெற்றிப்பெற்று இந்த வார வீட்டுத்தலையாக பிரவீன் ராஜ் தேவ் உள்ளார். மேலும் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசசில் போட்டியாளர்கள் பார்வதி, கம்ருதின், அரோரா, கலையரசன் மற்றும் கானா வினோத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பது வார இறுதியில் தெரியவரும். இந்த நிலையில் வைல்காட்ர் போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், பிரஜின், சாண்ட்ரா மற்றும் அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.




பிக்பாஸில் வீட்டுதல பிரவீன் – திவாகர் இடையே கைகலப்பு:
அதன்படி இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே பார்வையாளர்களை எரிச்சலடைய செய்யும் விதமாக போட்டியாளர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டு தல பிரவீன் திவாகரிடம் சட்டையை போட சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் அதனை மதிக்காமல் கேமரா முன்பு நடித்துக் காட்டிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் கடுப்பான பிரவீன் திவாகரை மறித்து தள்ளுகிறார். இதனால் திவாகரும் பிரவீனை தள்ளி விடுகிறார். இவர்கள் இடையே கைகலப்பு ஏற்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு BMW காரை பரிசளித்த டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர்
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
Video clearly shows Praveen pushed Diwakar away and blocked camera
Every person has a right to ask this arrogant behaviour of Praveen
Praveen Raj 👎👎👎#BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #BiggBossTamil
— K.K (@kkoffcl) October 29, 2025
Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!