பிக்பாஸில் நடிப்பு அரக்கனை நடிக்க விடாமல் தடுத்த வினோத் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9 : இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சண்டை வீடியோ மட்டுமே தொடர்ந்து ப்ரோமோவில் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று கொஞ்சம் காமெடியான வீடியோவை ப்ரோமோவில் வெளியிட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு.
சண்டை, வாக்குவாதம்… சண்டை, வாக்குவாதம் என இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 23 நாட்களாக வெளியான புரோமோ வீடியோ அனைத்தும் பார்வையாளர்களை எரிச்சல் மூட்டும் விதமாகவே இருந்தது. தொடர்ந்து வெளியாகும் ப்ரோமோ வீடியோதான் எரிச்சலாக இருக்கிறது என்றால் நேற்று 23- வது நாளிற்கான எபிசோட் முழுவதுமே பார்வையாளர்களை என்ன ஷோ இது என்று தோன்ற வைக்கும் அளவிற்கு பார்வதியின் டாக்ஸிக் பிகேவியர் இருந்தது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்தாலும் 15 போட்டியாளர்களுடனும் பார்வதி சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார். ஒரு கருத்திற்கு எதிர்கருத்து இருப்பது தவறு இல்லை. ஆனால் யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக பேசினால் தான் நாம் இங்கு தனித்து தெரிவோம் என்பதற்காக மிகவும் டாக்ஸிக்காக பார்வதி நடந்துகொள்கிறார்.
இது நேற்றையை எபிசோடில் ரசிகர்களை மிகவும் எரிச்சலடைய செய்தது. தொடர்ந்து சண்டை காட்சிகள் மட்டுமே ப்ரோமோ வீடியோவில் இருந்து வந்த நிலையில் இன்று கொஞ்சம் மாறுதலாக முதல் ப்ரோமோ கலகல காமெடியாக வெளியாகி உள்ளது. இந்த் போட்டி தொடங்கியதில் இருந்தே கானா வினோத் மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போலவே அடித்துக்கொண்டாலும் ரசிகர்களுக்கு அது காமெடியாகவே இருந்து வந்தது.
பிக்பாஸில் நடிப்பு அரக்கனை நடிக்க விடாமல் தடுத்த வினோத்:
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே திவாகர் ஒவ்வொரு கேமரா முன்பு நின்றும் ரீல்ஸ் செய்வது போல நடித்துக்காட்டி வருகின்றார். அதே மாதிரி இன்றும் ஒரு கேமரா முன்பு நடிக்க முயற்சிக்கும் போது வினோத் அவர் அருகில் நின்றுகொண்டு பாடலை சத்தமாக பாடி அவரை நடிக்க விடாமல் தடுக்கிறார். இது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மட்டும் இன்றி பார்வையாளர்களையும் சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day24 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/QePrPv1l7z
— Vijay Television (@vijaytelevision) October 29, 2025
Also Read… வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ



