விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Aaryan Movie Review: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். இந்தப் படத்தை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பார்த்த பலர் தங்களது விமர்சனத்தை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடிகரும் இயக்குநருமான செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா சௌத்ரி உட்பட பலர் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஆர்யன் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Aaryan – 3.5 out of 5. What if the psycho killer thinks he has a purpose in the world? And What if he is a super genius, meticulous and makes his every single move calculative with sheer perfection! @TheVishnuVishal once again plays a character in the film rather than a mere… pic.twitter.com/u2OKKlBOyk
— Rajasekar (@sekartweets) October 29, 2025
விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
ஆர்யன் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Aaryan 1st Half : Racy.. Riveting..
Serial killer with a twist..@TheVishnuVishal is back to form..
If the 2nd half is as good as the 1st Half, then it will be a big winner
— Ramesh Bala (@rameshlaus) October 29, 2025
ஆர்யன் படத்தின் முதல் பாகம் வெறித்தனமாக இருந்தது. மேலும் சீரியல் கில்லர் ட்விஸ்ட் சிறப்பாக இருந்தது. இந்தப் படம் விஷ்ணு விஷாலுக்கு கம்பேக்காக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாகம் சிறப்பாக உள்ளது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யன் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Aaryan interval OMG 😮 extraordinary 🥵 இதாண்ட சினிமா moment 👏
– Brilliant screenplay murattu engaging ah pogudhu 🔥
– Predict pannave mudiyalai 👏
– Selvaraghavan 🔥👌
– BGM 🙏அடுத்து என்ன நடக்கும் 🤔 பரபரப்பில்Waiting for 2nd half. ✅ pic.twitter.com/ZooxSGxyIE
— RamKumarr (@ramk8059) October 29, 2025
ஆர்யன் படத்தின் இடைவேளை காட்சி மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் இதுதாண்டா சினிமா என்பது போல தோன்றியது. மிகச் சிறபான திரைக்கதை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இருந்தது. நடிகர் செல்வராகவனின் நடிப்பு தீயாய் இருந்தது.
ஆர்யன் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Aaryan – Interval
Taut, stylish, and sharply executed. The unpredictable premise sets the mood for the second half. @TheVishnuVishal as investigation officer has that serious look
— sridevi sreedhar (@sridevisreedhar) October 29, 2025
இறுக்கமான, ஸ்டைலான மற்றும் கூர்மையான செயல்படுத்தல். கணிக்க முடியாத கதைக்களம் இரண்டாம் பாதியின் மனநிலையை அமைக்கிறது. விசாரணை அதிகாரியாக விஷ்ணு விஷால் அந்த தீவிரமான தோற்றத்தைக் கொண்டுள்ளார்.
ஆர்யன் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Aaryan 3.5/5 ✅
Story Writing & Screenplay ah Bayangarama Engage pannichi 🔥
Last 20min 🥵 + running time 2.15hr la முடிச்சது 👌@TheVishnuVishal back to form confirm HIT adikum no doubt ✅@selvaraghavan back bone of the movie 🙏 and also BGM 👏
Worth u guys 👌 pic.twitter.com/vS021MnyJ0
— RamKumarr (@ramk8059) October 29, 2025
கதை மற்றும் திரைக்கதை மிகவும் அருமையாக இருந்தது. கடைசி 20 நிமிடம் வேற லெவல். விஷ்ணு விஷாலுக்கு இந்தப் படம் கன்ஃபார்ம் ஹிட் அடிக்கும் சந்தேகமே இல்லை. செல்வராகவன் இந்தப் படத்திற்கு முதுகெலும்பாக உள்ளார். படத்தின் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக உள்ளது.