Rashmika Mandanna: ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ – தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
The Girlfriend Movie: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மற்றும் தீக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் வாங்கியுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) நடிப்பில் இறுதியாக தம்மா (Thamma)என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. ஹாரர், நகைச்சுவை என மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படமானது இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியானது. இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இதில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) நடித்துள்ளார். இப்படமானது பெண்ணியம் தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்திருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்த ட்ரெய்லருக்கு மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2025 நவம்பர் 7ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்டநெருங்கும் நிலையில் இந்த படத்தின் தமிழகம் மற்றும் கேரளம் ரிலீஸ் உரிமையை “திங்க் ஸ்டூடியோஸ்” (Think Studios) என்ற நிறுவனமானது பெற்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: யாஷின் டாக்சிக் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!
தி கேர்ள்ஃபிரண்ட் பட தமிழகம் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்
Love takes over the big screen in 8 days! ❤️✨#TheGirlfriend – a tale of love, emotion and connection — hits theatres from Nov 7!
Tamil Nadu & Kerala theatrical release by @ThinkStudiosInd #TheGirlFriendTrailer
▶️ https://t.co/3KD9MhtS3R#TheGirlfriendOnNov7th@iamRashmika… pic.twitter.com/ieWZ7cy8ke— Think Studios (@ThinkStudiosInd) October 30, 2025
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது சினிமாவில் மிக பிரம்மாண்ட படங்களில் நடித்துவருகிறார். இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதையும் தொடர்ந்து, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். இவரும் நடிகை நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் போன்ற நடிகைகள் பயன்படுத்தும் யுக்தியை கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் படியாகத்தான் தம்மா மற்றும் தி கேர்ள்ஃபிரண்ட் போன்ற படங்கள் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்
மைசா திரைப்படம் :
அந்த வகையில் இவர் லோகா திரைப்படத்த போல ஆக்ஷ்ன் படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம்தான் மைசா. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை தொடர்ந்து இப்படத்தின் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த மைசா திரைப்படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கவுள்ளார். இந்த படமானது பழங்கால போர் தொடர்பான பெண்ணியம் சார்ந்த கதைக்களத்துடன் பான் இந்திய மொழிகளில் தயாராகிவருகிறது. இப்படம் அநேகமாக 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.