Ajith Kumar: ஷாலினிக்கு மிகவும் நன்றியுள்ளவன்.. அவர் இல்லாமல் இது நடந்திருக்காது – அஜித் குமார்!
Ajith Kumar About Shalini: நடிகர் அஜித் குமார் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், கார் ரேஸ் மற்றும் இதர சமூக பணிகளையும் செய்துவருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.அதில் அஜித் குமார் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியை பற்றி பெருமையுடன் கூறியுள்ளார். அது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும், இவர் சினிமாவில் முதல் முதலில் தெலுங்கு படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்துக்கு பிறகு, இவர் தமிழ் திரையுலகில் நுழைந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என 2 படங்கள் வெளியாகியிருந்தது . அஜித் முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படமானது அஜித் குமாருக்கு அந்த அளவிற்க்கு வரவேற்பை கொடுக்கவில்லை, இந்த படத்தை அடுத்ததாக வெளியான குட் பேட் அக்லி படம்தான் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தகத்து.
மேலும் இந்த படங்ககளை தொடர்ந்து தற்போது கார் ரேஸ் போட்டிகளில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அந்த நேர்காணலில் அஜித் குமார் தனது மனையும், நடிகையுமான ஷாலினி அஜித் குமார் (Shalini Ajith Kumar) குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். “தன்னுடைய இந்த வளர்ச்சிக்கெல்லாம் அவர்தான் காரணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: பைசன் படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த விமர்சனம் – நெகிழ்ந்த மாரி செல்வராஜ்
ஷாலினி குறித்து நடிகர் அஜித் குமார் வெளிப்படையாக சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் அஜித் குமாரின் குடும்பம் குறித்து கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அஜித் குமார், “ஷாலினிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னை போன்றவருடன் வாழ்வது மிகவும் எளிமையான விஷயமில்லை. நான் நிறைய கடினமான காலங்களை கடந்து வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். மேலும் அவர் மிகவும் எனக்கு ஆதரவாக இருந்தார். ஷாலினியுடைய ஆதரவு இல்லாமல் இவை அனைத்தும் எனக்கு நடந்திருக்காது” என்றார். மேலும் ஷாலினி பற்றி பல்வேறு விஷயங்களையும் அஜித் குமார் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: தள்ளிப்போனது அஜித் குமாரின் ‘அட்டகாசம்’ பட ரீ- ரிலீஸ்.. ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்!
ஷாலினி குறித்து அஜித் குமார் பேசிய வீடியோ பதிவு:
“I’m extremely grateful to #Shalini🫶. I don’t think I’m an easy person to live with, i know i put her through a lot of hard times✌️. She has been very supportive. All this couldn’t happened without her support♥️✨”
– #Ajithkumar pic.twitter.com/FNCta5N8io— AmuthaBharathi (@CinemaWithAB) October 31, 2025
அஜித் குமாரின் AK64 படத்தின் அறிவிப்பு எப்போது.
இந்த AK64 திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் இந்த 2025ம் ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில்தான் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என அஜித் குமார் தெரிவித்துள்ளார்.