Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘ஒருவர் மட்டுமே காரணமல்ல’ கரூர் துயரம் குறித்து மனம் திறந்த நடிகர் அஜித்!!

Ajithkumar about karur stempede: நடிகர் அஜித்குமார் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், கரூர் துயரச் சம்பவம் குறித்தும், அதற்கு யார் காரணம் என்பது குறித்து விளக்கியுள்ளார். மேலும், கூட்டம் கூட்டி காட்டும் மனநிலைக்கு எதிராக தனது கருத்தை அதிரடியாக முன்வைத்துள்ளார்.

‘ஒருவர் மட்டுமே காரணமல்ல’ கரூர் துயரம் குறித்து மனம் திறந்த நடிகர் அஜித்!!
நடிகர் அஜித்குமார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Nov 2025 11:32 AM IST

சென்னை, நவம்பர் 01: கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், கரூர் துயர சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல, நாம் அனைவருமே காரணம் என்றும், ஊடகங்களுக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கூட்டம் கூட்டுவதற்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ள அவர், தனது ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பு குறித்தும் நெகிழ்ந்துள்ளார். அதோடு, அந்த அன்பால் தான் தனிப்பட்ட பல விஷயங்களை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் சினிமா முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதை விரிவாக பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதை தாண்டி, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கார் ரேஸ் போட்டிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய அவர் திருப்பதி, கேரளா என பல்வேறு கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் மேற்கொண்டு வந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அவர் ஊடகங்களை சந்திப்பதோ, பேட்டியளிப்பது என்பதோ ஒரு அரிதான நிகழ்வாகும்.

கூட்டம் காட்டுவதில் ஆர்வம்:

அந்தவகையில், சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும், அந்த தனிநபர் மட்டுமே அதற்கு காரணமல்ல, நாம் அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.

இதையும் படிங்க: 23 வருடங்கள்.. விக்ரம் எடுத்த முக்கிய முடிவு.. வெற்றி தேடி வருமா?

கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூட கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லை. இது ஏன் தியேட்டர்களில் மட்டும் நடக்கிறது? பிரபலங்கள், திரைக் கலைஞர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் கூட இதையெல்லாம் விரும்புவதில்லை.

FDFS கலாசாரம் வேண்டாம்:

ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என்றும் அன்பைக் காட்டுவற்கு வேறு வழிகள் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். FDFS கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. இந்த ஊடகங்களும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ

புகழ் முக்கியமான விஷயங்களை பறிக்கும்:

மேலும், புகழ் என்பது இரு பக்க கூர்மையான வாள் போன்றது. வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை பறித்துவிடும் என்றார். அதோடு, ரசிகர்கள் தன் மீது பொழியும் அன்புக்கு தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருப்பதாக கூறினார். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது” என அஜித் தெரிவித்துள்ளார்.