Attahasam: தள்ளிப்போனது அஜித் குமாரின் ‘அட்டகாசம்’ பட ரீ- ரிலீஸ்.. ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்!
Attahasam Re-release Postponed: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் தமிழில் இதுவரை பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற படம் அட்டகாசம். இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், படக்குழு ரீ ரிலீஸ் தேதியை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படமானது வெளியாகி, பான் இந்திய வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக அஜித் குமார் புதிய படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் கடந்த 2004ம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான படம்தான் அட்டகாசம் (Attahasam). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் சரண் (Saran) இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித் குமார் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் முன்னணி நாயகியாக நடிகை பூஜா (Pooja) நடித்திருந்தார். கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இப்படம் மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. சுமார் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 21 வருடங்களுக்கு பின் இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி இந்த 2025 அக்டோபர் 31ம் தேதியில் அட்டகாசம் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவிருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: காதலியை கரம்பிடித்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. குவியும் வாழ்த்துகள்!
படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:
Due to unexpected combined issues faced by us, the Attahasam re-release scheduled for October 31st has been postponed. We sincerely apologize from the bottom of our hearts to all Thala fans and supporters for the inconvenience caused. We will come back strongly.
— IFPA ASSOCIATION (@priyanaair) October 31, 2025
அந்த பதிவில் படக்குழு எதிர்பாராத சில தொழில்நுட்ப கோளாறால் இந்த அட்டகாசம் படத்தின் ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோரப்பட்டுள்ளது. மேலும் அஜித் குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கேர்ட்பதாகவும் படக்குழு கூறியுள்ளது. விரைவில் இந்த படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என்றும் அந்த பதிவு படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் குமாரின் படத்தை இயக்கும் FIR பட இயக்குநர்? வைரலாகும் தகவல்!
ஏற்பாடுகள் செய்து அட்டகாசம் ரீ- ரிலீசை எதிர்பார்த்த ரசிகர்கள் :
இந்த அட்டகாசம் திரைப்படம் இன்று வெளியாகும் என அஜித் குமாரின் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள், மேளதாளம், பட்டாசுகள் மற்றும் மாலைகள், தோரணங்கள் என பல திரையரங்குகளை அலங்கரித்திருந்தனர். மேலும் இந்த படம் இன்று வெளியாகாதது என தெரிந்த நிலையில், அவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.