Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: அஜித் குமாரின் படத்தை இயக்கும் FIR பட இயக்குநர்? வைரலாகும் தகவல்!

AK65 Movie Update: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. மேலும் இவர் AK64 படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார். இப்படத்தை அடுத்ததாக AK65 படத்தில் FIR பட இயக்குநருடன் இணைவதாக கூறப்படுகிறது. அது குறித்துப் பார்க்கலாம்.

Ajith Kumar: அஜித் குமாரின் படத்தை இயக்கும் FIR பட இயக்குநர்? வைரலாகும் தகவல்!
அஜித் குமார் மற்றும் மனு ஆனந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2025 21:58 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படமானது வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்ததாக அஜித் குமார் முழுவதும் கார் ரேஸ் மற்றும் பயிற்சியில் பிசியாக இருந்துவந்தார். தற்போது கார் ரேஸ் விரைவில் முடிவடையும் நிலையில், மேலும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். அஜித் குமாரின் AK64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை அடுத்ததாக AK65 படத்தை எந்த இயக்குநர் இயக்குகிறார் என்பது பற்றிய அப்டேட்டும் இணையத்தில் வைரலாகிவருகிறது. அஜித் குமாரின் 65வது படத்தை FIR மற்றும் மிஸ்டர் எக்ஸ் (Mr X) போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்… மாரி செல்வராஜ் சொன்ன விசயம்

அஜித் குமாரின் 65வது திரைப்படம் :

அஜித் குமாரின் 65வது படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்குவதாக கூறப்படுகிறது. இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!

FIR மற்றும் மிஸ்டர் எக்ஸ் என தொடர்ந்து ஆக்ஷ்ன் திரைப்படங்களை எடுத்துவரும் மனு ஆனந்த் இந்த AK65 படத்தை முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அறிவிப்புக்களை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமார் மற்றும் மனு ஆனந்த் இயக்கும் பதிவு :

அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் அப்டேட் :

இந்த AK64 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இது குறித்து அஜித் குமார் முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன்படி இந்த AK64 படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், பிற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.