Shah Rukh Khan: ஷாருக்கானின் 60வது பர்த்டே.. இன்று வெளியான ‘கிங்’ பட அறிவிப்பு வீடியோ!
King Movie Title Teaser: பான் இந்திய முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் இந்தி மொழிகளில் பிரம்மாண்ட படங்களானது தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம்தான் கிங். இன்று ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ஷாருக்கான் (Shah Rukh Khan). இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துங்கி (Dunki) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இது அவருக்கு அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. அதற்கு முன் இவர், இயக்குநர் அட்லீயின் (Atlee) கூட்டணியில் நடித்திருந்த படம்தான் ஜவான் (Jawan). இந்த படத்தில் ஷாருக்கான் 2 வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இப்படமானது வசூலில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் நடிகர் ஷாருக்கான், இந்த படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று 2025 நவம்பர் 2ம் தேதியில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் நடிப்பில் உருவாகிவரும் கிங் (King) படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க : அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
ஷாருக்கானின் கிங் திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ பதிவு :
Darr nahi, Dehshat hoon- #KING#KingTitleReveal is out now- https://t.co/HL5qCgss7r
In Cinemas 2026 pic.twitter.com/4JACdDvqV5
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2025
ஷாருக்கானின் கிங் திரைப்படம் :
இந்த கிங் திரைப்படத்தை, பதான் மற்றும் வார் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இவருடன் நடிகர் ஷாருக்கான் இந்த 3 வருடங்களில் 2 வது முறையாக கைகோர்த்துள்ளார். இந்த கிங் படத்தில் முன்னணி நாயகியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ரோஃப், ராகவ் ஜுயல், அபயா வர்மா, சுகானா கான் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : AK 64 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்திற்கு தமிழ் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஷாருக்கான் மேஜிக் மேன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்ஷ்ன், எமோஷனல் மற்றும் மாறுபட்ட திரில்லர் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.