AK 64 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
Ajith Kumar: நடிகர் அஜித் குமார் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அடுத்ததாக தான் நடிக்க உள்ள படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது பேஷனான ரேசிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி பல ஆண்டுகளாக பொது வெளியிலும் பேட்டிகளிலும் கலந்துகொள்ளாத நடிகர் அஜித் குமார் தற்போது தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தப் பேட்டிகளில் தனது சினிமா பயணம், ரேசிங் மற்றும் ரசிகர்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பேட்டியில் தனது ரேசிங் குறித்தும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்தும் நடிகர் அஜித் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் பேசியபோது ஒரு இயக்குநருடன் படத்திற்காக கமிட்டாகும் போது அவர்கள் சினிமாவில் என்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்றாலும் நான் இருக்கும் இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளாமல் இருந்தால் போதும் என்று தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.




ஜனவரியில் வெளியாகும் AK 64 படத்தின் அறிவிப்பு:
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் AK 64. இந்தப் படம் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வருகின்ற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் ரேசிங்கில் பணியாற்ற வேண்டியதும் வரலாம். ஆனால் தற்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் நடிகர் அஜித் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது. இது அஜித் குமார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஓர் ஆண்டுகளை நிறைவு செய்தது அமரன், லக்கி பாஸ்கர் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு!
நடிகர் அஜித் குமார் பேசிய வீடியோ:
#AjithKumar about #AK64
– I might start filming in a couple of months. We should be able to make an announcement by January.
– I may end up filming and racing at the same time, I’m working on balancing both.#AjithKumarRacingpic.twitter.com/96o5nCozCl— Movie Tamil (@_MovieTamil) October 31, 2025