தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!
4 Years Of Jai Bhim Movie: இயக்குநர் டி.ஜே. ஞானவேல் எழுதி இயக்கிய படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2-ம் தேதி நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜெய் பீம். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா (Actor Suriya) முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், பேபி ஜோஷிகா மாயா, ராவ் ரமேஷ், தமிழ், சூப்பர்குட் சுப்ரமணி, பால ஹாசன், எம். சின்ராசு, சுபத்ரா ராபர்ட், ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, இளங்கோ குமரவேல், ஜெய ராவ், சுஜாதா சிவக்குமார், ரவி வெங்கட்ராமன், சிபி தாமஸ், ராஜா ராணி பாண்டியன், ஷங்கர் சுந்தரம், ஜிஜோய் ராஜகோபால், சஞ்சய் ஸ்வரூப், குமார் நடராஜன், பாவா செல்லதுரை, டேவிட் சாலமன் ராஜா, அனகூர் ராஜு, தீபா, காவேரி, பிகில் சிவா, சிவரஞ்சனி, வி. ரெங்கநாதன், ஸ்ரீகாந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அரவிந்த்யன் சேஜு. ராஜு, பி.ஆர். ஜார்ஜ், பேட்மேன், குலோத்துங்கன், தனசேகர், ராமச்சந்திரன், தயாளன், யுவா, தண்டபாணி, அசோகன், சரவணன், தேவா, குமாரசாமி, சுப்பிரமணியன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய் பீம் படத்தின் கதை என்ன?
கஸ்டடி டெத் என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைப்பெற்றது. அப்படி இருளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது பொய்யான திருட்டு வழக்கைப் போட்டு அந்த திருட்டை தான் செய்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி அடித்தே கொலை செய்துவிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த கொலையை காவல்துறையினர் மறைக்க முயற்சிக்கும் நிலையில் நடிகர் சூர்யா அவர்களுக்கு எப்படி உதவினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஜெய் பீம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Truth: Revealed🔥
Justice: Served⚖️
Humanity: Restored 🤍A creation we are so proud to be a part of and grateful for the love you’ve showered✨#4YearsOfJaiBhim ⚖️#JaiBhim@Suriya_offl #Jyotika @tjgnan @rajsekarpandian @prakashraaj @jose_lijomol @Manikabali87… pic.twitter.com/H8665ZcEXR
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) November 2, 2025
Also Read… லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி – வெளியானது அறிமுக வீடியோ



