Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya47: பிரம்மாண்ட கூட்டணி… சூர்யாவின் 47வது படத்தில் இணையும் லோகா பட நடிகர்?

Suriya 47 Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் இணைகிறார். இப்படத்தில் மலையாள பிரபலங்கள் பலரும் இணையும் நிலையில், மேலும் இப்படத்தில் லோகா பட நடிகரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.

Suriya47: பிரம்மாண்ட கூட்டணி… சூர்யாவின் 47வது படத்தில் இணையும் லோகா பட நடிகர்?
சூர்யா மற்றும் நஸ்லென் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2025 17:01 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படமானது வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்திருந்தது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து சூர்யா, கருப்பு (Karuppu) மற்றும் சூர்யா46 (Suriya46) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக இணைந்திருந்தார். இதில் கருப்பு படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மேலும் தற்போது சூர்யா46 படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்திற்குள் நிறைவைடையும் என ஏதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் சூர்யா மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகும் என கூறப்படும் நிலையில், இதில் பல மலையாள பிரபலங்கள் நடிக்கவுள்ளார்கள். மேலும் இதில் லோகா மற்றும் பிரேமலு போன்ற படங்களில் நடித்த நடிகர் நஸ்லேன் (Naslen) முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்… வைரலாகும் தகவல்

சூர்யாவின் 47வது திரைப்படம் :

சூர்யாவின் இந்த 47வது திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டைமென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படும் நிலையில் முன்னணி நாயகியாக நடிகை நஸ்ரியா நடிப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் தமிழில் நஸ்ரியா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : துல்கர் சல்மானின் காந்தா படத்தின் டைட்டில் டிராக் பாடல் ரிலீஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

இப்படம் முழுக்க தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகவுள்ள நிலையில், சூர்யாவின் முதல் மலையாள படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கருப்பு படத்தின் முதல் பாடல் குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு :

சூர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, கதாநாயகியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பிரபலமான நிலையில், விரைவில் 2வது பாடல் வெளியாகவுள்ளது. இந்த படமானது 2026 ஆம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.