Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya: ஸ்ரீலீலாவின் முதல் தமிழ் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நடிகர் சூர்யா பேச்சு!

Suriya About Sreeleela:தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு, சூர்யா46 போன்ற படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ரவி தேஜா மற்றும் ஸ்ரீ லீலாவின் மாஸ் ஜாதரா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Suriya: ஸ்ரீலீலாவின் முதல் தமிழ் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நடிகர் சூர்யா பேச்சு!
சூர்யா மற்றும் ஸ்ரீலீலாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2025 19:08 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படமானது வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா46 (Suriya46) படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் அவருடன் ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவருகிறார். இந்த படத்தைத் தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) தயாரிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தெலுங்கு ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் சூர்யா, சமீபத்தில் நடிகர் ரவி தேஜா (Ravi Teja) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் ஜாதரா (Mass Jathara) படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்த பேசிய அவர் நடிகை ஸ்ரீலீலா குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

ஸ்ரீலீலா குறித்து நடிகர் சூர்யா பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சூர்யா, ” ஸ்ரீ லீலா உங்களின் முதல் தமிழ் திரைப்படம் இயக்குனர் சுதா கொங்காராவுடன்தானே. அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என அவர் அதில் பேசியிருந்தார். நடிகர் சூர்யா கூறிய திரைப்படம்தான் பரசக்தி.

ஸ்ரீலீலா குறித்து சூர்யா பேசிய வீடியோ பதிவு :

நடிகை ஸ்ரீ லீலாவின் முதல் தமிழ் படம் :

கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்துவருபவர் ஸ்ரீலீலா. இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்ககள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம்தான் மாஸ் ஜாதரா. இந்த படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: சூப்பர் ஹீரோ படம் இயக்கவேண்டும் என்பது எனது ஆசை.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்!

அந்த வகையில் தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்திருப்பது பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் என பல்வேறு பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் நிலையில், பான் இந்திய மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.