Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kaantha: துல்கர் சல்மானின் காந்தா படத்தின் டைட்டில் டிராக் பாடல் ரிலீஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

Kaantha Movie Update: தென்னிந்தியாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியிருப்பதுதான் காந்தா. இப்படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியான நிலையில், 3வது பாடலான காந்தா பட டைட்டில் டிராக் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Kaantha: துல்கர் சல்மானின் காந்தா படத்தின் டைட்டில் டிராக் பாடல் ரிலீஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!
துல்கர் சல்மானின் காந்தாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2025 21:03 PM IST

மலையாள சினிமாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகனாக நடித்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் இறுதியாக லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) என்ற படம் வெளியானது. இந்த படமானது எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்த நிதியில், இதை அடுத்ததாக இவரின் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கும் படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ள நிலையில், நடிகர் ராணாவும் (Rana) இணைந்து தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த 1960ம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இந்த படம்தான் இவருக்கு முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன், எமோஷனல், மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 நவம்பர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜானு சாந்தர் இசையமைத்திருக்கும் நிலையில், இவரின் இசையமைப்பில் இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 3-வதாக காந்தா திரைப்படத்தின் டைட்டில் டிராக்வெளியாகவுள்ளது. இந்த பாடல் 2025 அக்டோபர் 30ம் தேதியில் மாலை 4 :30க்கு வெளியாகவுதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் வேலை நேரத்தை நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்- ராஷ்மிகா மந்தனா!

காந்தா படத்தின் 3வது பாடல் ரிலீஸ் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு :

காந்தா திரைப்படத்தின் கதை என்ன :

இந்த காந்தா திரைப்படமானது ஒரு பிரியாட்டிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் சுமார் 1960களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அன்றய சினிமா காலகட்டத்தில் நடிகர் மற்றும் இயக்குநருக்கு இருக்கும் போட்டிகள் மற்றும் பொறாமை அவர்களுக்குள் இருக்கும் பகை தொடர்பான கதைக்களத்தில் இந்த காந்தா படமானது தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் – நிவாஸ் கே பிரசன்னா

இந்த படத்தின் டீசர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், அதில் அவரின் நடிப்பு தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தா படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற காரணம் :

இந்த படமானது ஆரம்பத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாக்குவதாக இருந்தது. இப்படத்திற்கு முன் துல்கர் சல்மானின் தயாரிப்பில் லோகா என்ற படமானது வெளியானது. இப்படம் 2025 ஆகஸ்ட் இறுதியில் வெளியான நிலையில், எதிர்பாராத விதமாக மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த வரவேற்பு தடை படக்கூடாது என்று நடிகர் துல்கர் சல்மான் கந்தா பட ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார். அதன் பின் 2025 நவம்பர் 14ம் தேதியில் இப்படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.