லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி – வெளியானது அறிமுக வீடியோ
Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் இயக்குநராக பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தின் அறிவிப்பு வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னணி நாயகன்களை இயக்கத் தொடங்கினர். அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்களாகிய கார்த்தி, விஜய், விக்ரம் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் இல்லை இந்திய சினிமாவிலேயே சினிமாட்டிக் யுனிவர்சை அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.
இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தி இருப்பதால் அதனை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இதில் முதல் படமாக கைதி இருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து விக்ரம் மற்றும் லியோ படங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தியதாக வந்தது. அதன்படி அடுத்ததாக இந்த யுனிவர்சில் எந்தப் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக நடிக்க உள்ளார்.




தேவதாஸாக டிசி படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்த நிலையில் தற்போது நாயகனாக நடிக்க உள்ளார். அதன்படி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்த டிசி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக நடிகை வமிகா கபி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் படத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sun Pictures proudly presents #DC starring @Dir_Lokesh & @iWamiqaGabbi
Directed by @ArunMatheswaran
An @anirudhofficial musical
▶️ https://t.co/khNJS6e8UH pic.twitter.com/oGHGBvfVB1
— Sun Pictures (@sunpictures) November 1, 2025
Also Read… பைசன் படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த விமர்சனம் – நெகிழ்ந்த மாரி செல்வராஜ்