Ajith kumar: ரீல் இல்ல ரியல்.. திரும்பி வந்த பில்லா அஜித்.. வைரலாகும் வீடியோ!
Ajith Kumars Recent Look: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் வெறும் நடிகர் மட்டுமில்லாமல் கார் ரேஸராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் அஜித் குமார், பில்லா பட தோற்றத்தில் கோட் ஷூட் அணிந்திருக்கும் வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
 
                                நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சினிமாவையும் கடந்து தனது மற்றொரு துறையான ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (God Bad Ugly) என்ற படமானது வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்த நிலையில், அதை தொடர்ந்து கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் நடிகர் அஜித் குமார் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் சார்பாகவும், இந்திய சினிமாவில் சார்பாகவும் உலகநாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் கலந்துகொண்டார் அஜித் குமார். இதுவரை இவை பங்குபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் என்ற பத்திரிகை சேனலுக்கான வீடியோ ஒன்றில் அஜித் குமாரின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. பில்லா (Billa) திரைப்படத்தில் அஜித் குமார் கோட் ஷூட் அணிந்து நடந்துவருவது போல இந்த வீடியோவில் அஜித் நடந்து வரும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் பல்வேறு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: ஹே மின்னலே.. ஓராண்டை நிறைவு செய்த சாய் பல்லவி – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!
இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக அஜித் குமாரின் வீடியோ :
Once again AK elevating the suits and rewinds to #Billa Times 💥🔥🔥
Dapper Mr. Ajith 😎#AK64pic.twitter.com/GQb8cSYevk
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) October 31, 2025
இந்த வீடியோவில் நடிகர் அஜித்தின் பேச்சு முதல் அவரின் தோற்றம் வரை, பில்லா பட அஜித் குமாரை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்துகிறது. மேலும் இவர் வரும் 2025ம் நவம்பர் மாதத்தில் இறுதியாக ஆசிய லீ மான்ஸ் சீரிஸில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த போட்டியில் அஜித் குமாருடன் தமிழக கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திக்கும் பங்குபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போட்டிக்கான பயிற்சியில் அஜித் குமார் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் புதிய படங்கள் :
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை அடுத்ததாக, தொடர்ந்து AK64 படத்திலும் அஜித் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அஜித் குமாரின் ஆசிய லீ மான்ஸ் போட்டி நிறைவடைந்தவுடன் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 23 வருடங்கள்.. விக்ரம் எடுத்த முக்கிய முடிவு.. வெற்றி தேவி வருமா?
மேலும் இப்படத்தை அடுத்ததாக அஜித் குமார் FIR படத்தை இயக்கியிருந்த மனு ஆனந்த் இயக்கத்தில் AK65 படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பற்றி எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    