Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Amaran: ஹே மின்னலே.. ஓராண்டை நிறைவு செய்த சாய் பல்லவி – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!

1 Year Of Amaran: தென்னிந்திய சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் இதே நாளில் வெளியான திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கூட்டணியில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் இன்றுடன் இப்படமானது வெளியாகி 1 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Amaran: ஹே மின்னலே.. ஓராண்டை நிறைவு செய்த சாய் பல்லவி – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!
அமரன் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2025 15:28 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் சாய் பல்லவியின் (Sai Pallavi) கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் அமரன் (Amaran). இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இப்படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் (Major Mukund Varadarajan) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் கூட்டணி இப்படத்தில்தான் முதல் முறையாக இணைந்திருந்த நிலையில், மிகவும் அருமையாக பொருந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியிருந்தது. இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் அக்டோபர் 31ம் தேதியில் வெளியான நிலையில், இன்றுடன் (31/10/2025) ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் படத்தை இயக்கும் FIR பட இயக்குநர்? வைரலாகும் தகவல்!

அமரன் படக்குழு வெளியிட்ட 1 வருட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு ;

சிவகார்த்திகேயனின் மாபெரும் வெற்றி படம் அமரன் :

சிவகார்த்திகேயனின் நடிப்பில் 22வது படமாக இந்த அமரன் படமானது வெளியானது. இப்படத்திற்காக இவர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்தார் என்றே கூறலாம். இந்த படத்தில் அவர் முகுந்த் வரதராஜனின் உண்மையான தோற்றத்தை போல தெரியவேண்டும் என பல்வேறு உடல் மாற்றத்தையும் செய்திருந்தார். மேலும் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என சிவகார்த்திகேயன் வாழ்ந்து காட்டினார் என்றே கூறலாம்.

இதையும் படிங்க: நடிகர் என்பது ஒரு அருவருப்பான வேலை.. மறைமுகமாக பிரபல நடிகரை தாக்கிய மாரி செல்வராஜ்!

சிவகார்த்திகேயனின் முதல் பிரம்மாண்ட வெற்றி வசூல் :

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதை விடவும் ஒரு படி மேலாக சாய் பல்லவியின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. பல வருடங்களுக்கு பின் சாய் பல்லவிக்கு தமிழில் அமைந்த ஒரு வெற்றி படமாக அமரன் இருந்தது. இந்த அமரன் படமானது சுமார் ரூ 80 கோடி பொருட்செலவில் உருவான நிலையில், ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த முதல் படமாக அமரன் திரைப்படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து வெளியான மதராஸி படம் கூட சுமார் ரூ 100 கோடிதான் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.