Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை முதலில் நிராகரித்த நடிகை.. அட இவரா?

The Girlfriend Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் ராகுல் ரவீந்திரன். இவரின் நடிப்பில் பல்வேறு படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது பற்றி பார்க்கலாம்.

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை முதலில் நிராகரித்த நடிகை.. அட இவரா?
தி கேர்ள்ஃபிரண்ட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2025 16:19 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) நடிப்பில் பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில்  கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தம்மா (Thamma). இப்படமானது கடந்த 2025 அக்டோபர் மாதத்தின் இறுதியில் வெளியானது. ஹாரர் மற்றும் நகைச்சுவை என பல்வேறு மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) நடித்துள்ளார். இப்படம் வரும் 2025 நவம்பர் 7ம் தேதி முதல் உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதையில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை முதலில் யாரிடம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இப்படத்தின் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஓர் ஆண்டுகளை நிறைவு செய்தது அமரன், லக்கி பாஸ்கர் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு!

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை நிராகரித்த நடிகை

சமீபத்தில் தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்த பத்திரிற்கு நடிகை ராஷ்மிகா முதல் தேர்வல்ல என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில் அவர், ” நான் ஒரு கதையை இயக்கும்போதெல்லாம், எனது நண்பர்களான, வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜித் போன்றவர்களிடம் காண்பிப்பது எனது பழக்கம். இந்நிலையில் இந்த தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை நான் சமந்தவிடம் காட்டினேன்.

இதையும் படிங்க: ‘ஒருவர் மட்டுமே காரணமல்ல’ கரூர் துயரம் குறித்து மனம் திறந்த நடிகர் அஜித்!!

அவர் உடனே படித்துவிட்டு இந்த கதை எனக்கு நன்றாக இருக்காது, ராஷ்மிகாவிடம் கொடுங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். மேலும் இந்த கதையை உடனே ராஷ்மிகாவிடம் அனுப்பினேன், அவரும் ஒரு 2 நாட்களில் படித்துவிட்டு ஓகே சொன்னார்” என்று அவர் அந்த நிகழ்ச்சியில் ஓபனாக பேசியிருந்தார்.

தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர்

இந்த தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படமானது ஒரு பெண்ணின் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன், அணு இம்மானுவேல், இயக்குநர் ராகுல் ரவீந்திரனும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில், முழு காதல் படமாக இந்த தி கேர்ள்ஃபிரண்ட் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.