Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Thalavara Movie Update: நடிகர் அர்ஜுன் அசோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தலவரா. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
தலவராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2025 22:55 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் அசோகன் (Arjun Ashokan). இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலவரா. இந்தப் படத்தை இயக்குநர் அகில் அனில்குமார் எழுதி இயக்கி உள்ளார். கடந்த 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் உடன் இணைந்து நடிகர்கள் ரேவதி சர்மா, அசோகன், தேவதர்ஷினி, சரத் ​​சபை, அதிரா மரியம், அபிராம் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி, சாம் மோகன், ஹரிஷ் குமார், சோஹன் சீனுலால், ஷாஜு ஸ்ரீதர், விஷ்ணு ரெகு, முஹம்மது ரஃபி, மனோஜ் மோசஸ், அஸ்வத் லால் நவநீத் வேடத்தில் அமித் மோகன் ராஜேஸ்வரி நசீர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஷெபின் பேக்கர் புரொடக்ஷன்ஸ் மற்றும் மூவிஸ் நரேட்டிவ் ஆகியவை சார்பாக தயாரிப்பாளர்கள் ஷெபின் பேக்கர் மற்றும் மகேஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எலக்ட்ரானிக் கிளி மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Also Read… பிக்பாஸில் வாரம் முழுவதும் கத்திக்கொண்டே இருந்த போட்டியாளர்கள் – விஜய் சேதுபதி எடுத்த சூப்பர் ரிவெஞ்ச்

ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு?

நாயகன் அர்ஜுன் அசோகன் தோல் பூஞ்சை நோயால் சிறு வயதிலேயே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அதன் காரணமாகவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளக்சில் இருக்கிறார். ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதனை எடிட் செய்து தனது முகத்தை மாற்றுகிறார். இப்படி இருக்கும் நாயகனுக்கு ஒரு காதல் ஏற்படுகின்றது. யாரும் தன்னை காதலிக்க மாட்டார்கள் என்று நாயகன் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பெண் நாயகனின் குறையை நிறையாக பார்த்து காதலிக்கிறார்.

ஒரு போட்டோ எடுக்கவே தயக்கப்படும் நாயகன் எதிர்பாராதவிதமாக ஒரு ஷார்ட் ஃபிலிமில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதில் அவரால் வாய்ப்பு பெறவே முடியாமல் கஷ்டப்படுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் சாதித்தாரா சினிமாவில் இல்லையா என்பது படத்தின் கதை.

Also Read… லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி – வெளியானது அறிமுக வீடியோ