Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிடில் கிளாஸ் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – வைரலாகும் வீடியோ

Middle Class Movie Teaser | தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து பிறகு காமெடி நடிகராக உயர்ந்தவர் நடிகர் முனிஷ் காந்த். இவரது காமெடி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கதையின் நாயகனாகவும் நடிகர் முனிஷ் காந்த் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

மிடில் கிளாஸ் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – வைரலாகும் வீடியோ
மிடில் கிளாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Nov 2025 21:51 PM IST

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பரிச்சையமான சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வருகின்றனர். அதன்படி இந்த சீரியலில் ஒரு சிரிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகர் முனிஷ்காந்த். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் படங்களில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற படத்தில் இருந்து தான் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் முனிஷ் காந்த். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியது.

காமெடி மட்டும் இன்றி படங்களில் இவர் நடிக்கும் சீரியசான கதாப்பாத்திரங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், விஷ்ணு விஷால், சித்தார்த், விக்ரம், ஜீவா, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், விஷால், ரஜினிகாந்த், சிலம்பரசன், தனுஷ் மற்றும் கார்த்தி என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இவர் பெருசு, கேங்கர்ஸ், படைதலைவன், ஜென்ம நட்சத்திரம் மற்றும் சரண்டர் என இதுவரை 5 படங்களில் நடித்துள்ளார்.

மிடில் கிளாஸ் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் ரவி மோகன்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர் முனிஷ் காந்த் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், குரேஷி, வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படம் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நாளை மாலை வெளியாகிறது பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் வீட்டில் பார்வதி, திவாகரை விசச்செடிகள் என்று சொன்ன பிரஜின் – வைரலாகும் வீடியோ!