பிக்பாஸ் வீட்டில் பார்வதி, திவாகரை விசச்செடிகள் என்று சொன்ன பிரஜின் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 4 வாரங்கள் முடிவடைந்து தற்போது 5-வது வாரம் தொடங்கி நடைபெறுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் பிரஜின் பேசியது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல நெகட்டிவான விமர்சனத்தைப் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Bos Tamil Season 9)நிகழ்ச்சி பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் 20 போட்டியாளர்கள் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதன்படி இந்த வீட்டிற்குள் கனி திரு, சபரி, எஃப்ஜே, கெமி, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, கலையரசன், ரம்யா ஜோ, கம்ருதின், கானா வினோத், ஆதிரை, நந்தினி, திவாகர், பார்வதி, விக்ரம், சுபிக்ஷா, வியானா, அரோரா, துஷார் மற்றும் அப்சரா என 20 பேர் கலந்துகொண்டனர்.
இதில் நந்தினி, பிரவீன்காந்தி, அப்சரா, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று 4-வது வார இறுதியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் உள்ளே நுழுந்துள்ளனர். முதல் நாள் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று மற்றப் போட்டியாளர்கள் தொடர்ந்து ஆவளுடன் காத்திருந்தனர்.




பிக்பாஸின் விசச் செடிகள் பார்வதி மற்றும் திவாகர்:
இந்த நிலையில் இந்த 5-வது வாரத்திற்கான வீட்டு தலையாக வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்த திவ்யா கணேஷ் தேவாகியுள்ளார். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் ஓபன் நாமினேஷனாக நடைப்பெற்றுள்ளது. இது தொடர்ன்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் ப்ரஜின் இந்த வீட்டில் உள்ள விசச் செடிகள் என்று பார்வதி மற்றும் திவாகர் என்று தெரிவித்துள்ளதுடன் அவர்களை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மீண்டும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ் – ஹீரோ யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் வீடியோ:
#prajin example🔥🔥🔥🔥🔥🔥#BiggBossTamilSeason9 #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #BiggBossTamil9 pic.twitter.com/JPYj1gFgai
— indran (@biggbosstws) November 3, 2025
Also Read… தனுஷின் 55-வது படம் எப்படி இருக்கும்? இணையத்தில் கசிந்த தகவல்