இந்த 4-வது வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறும் நபர் இவர்தானா? வெளியானது தகவல்!
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிவடைந்து தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த வாரம் எவிக்ஷனுக்காக 5 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் யார் வெளியேற உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 4-வது வாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே பெற்று வருகின்றது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மீது நெகட்டிவான விமர்சனத்தையே அளித்து வருகின்றனர். இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்ட நிலையில் ஒரு போட்டியாளர் கூட சிறப்பாக விளையாடுகிறார் அல்லது இந்த போட்டியாளரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் டாக்ஸிக்காக இருக்கிறார். மேலும் தொடர்ந்து 20 போட்டியாளர்களுன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 4 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட உள்ளனர். அதன்படி கடந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கத்திக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தது ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீது வெறுப்பு அதிகரித்தது. மேலும் நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை மிகவும் டாக்ஸிக்காக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிக்பாஸ் வீட்டில் 4-வது வாரம் வெளியேறப்போவது இவர்தான்?
அதன்படி இந்த வாரம் நடைப்பெற்ற நாமினேஷன் ப்ராசசில் 5 நபர்கள் இடம்பிடித்து இருந்தனர். அதன்படி கம்ருதின், பார்வதி, வினோத், கலையரசன் மற்றும் அரோரா ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தனர். அதில் குறைவான வாக்குகளைப் பெற்ற கலையரசன் இந்தப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த வாரம் தான் கலையரசன் தனது வாழ்க்கை கதையை சிறப்பாக சொன்னதாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் அவர் அதனை பயன்படுத்த முடியாமல் இந்த வாரமே வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். இது தொடர்பான தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ஓர் ஆண்டுகளை நிறைவு செய்தது அமரன், லக்கி பாஸ்கர் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day27 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Ebjm7HOnpA
— Vijay Television (@vijaytelevision) November 1, 2025