Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘தாதாசாகேப் பால்கே விருது’ வென்ற அல்லு அர்ஜுன் மற்றும் சாய் பல்லவி.. குவியும் வாழ்த்துக்கள்!

Dadasaheb Phalke Awards 2025: சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்துவருபவர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் பல்வேறு மொழிகளில் படங்ககள் நடித்துவரும் நிலையில், இந்த 2025ம் ஆண்டின் சிறந்த நடிகர்களுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாதாசாகேப் பால்கே விருது’ வென்ற அல்லு அர்ஜுன் மற்றும் சாய் பல்லவி.. குவியும் வாழ்த்துக்கள்!
அல்லு அர்ஜுன் மற்றும் சாய் பல்லவிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2025 19:21 PM IST

இந்திய அரசால் திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது (Dadasaheb Phalke International Film Awards). இந்த விருதானது கடந்த 1969ம் ஆண்டில் இருந்து கொடுக்கப்பட்டுவருகிறது. இது இந்திய சினிமாவை பெருமைப் படுத்தும் விதத்தில், இந்திய அரசால் ஆண்டுதோறும் பல்வேறு நடிகர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் சிறந்த படம் என பல்வேறு கேட்டகிரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த 2025-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு (Allu Arjun) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இந்திய நடிகைக்கான விருது பிரபல நடிகை சாய் பல்லவிக்கு (Sai Pallavi) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த ஆர்டிஸ்ட் என்ற விருது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு (A.R. Rahman) அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது கமிட்டிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ் – ஹீரோ யார் தெரியுமா?

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வென்றது குறித்து அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் நடிகர் அல்லு அர்ஜுன், “இந்த கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள் என்றும், தனது ரசிகர்களுக்கும் நன்றி” தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

பல்துறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற சாய் பல்லவி :

நடிகை சாய் பல்லவி, சமீபத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருதை வென்றிருந்தார். அதை தொடர்ந்து இந்த 2025ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதில், பல்துறை பல்துறை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆர்டிஸ்டிற்கான விருதை வெற்ற ஏ.ஆர். ரஹ்மான் :

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த 2025ம் ஆண்டிற்கான சிறந்த ஆடிஸ்ட் என்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.