வீட்டுதல பிரவீனை விஜய் சேதுபதி முன் விமர்சித்த போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 4 வாரங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த 4-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வீட்டு தலையாக பிரவீன் இருந்துவந்த நிலையில் இவரின் வீட்டு தல பணி எப்படி இருந்தது என்பது குறித்து போட்டியாளர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த சீசனில் இல்லாத அளவிற்கு மிகவும் அதிக அளவில் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த 9-வது சீசனுக்காக உள்ளே அனுப்பப்பட்டாலும் யாருமே மக்கள் மனதை கவரவில்லை. எதோ ஒரு வகையில் மக்களின் வெறுப்பை மட்டுமே இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் சம்பாதித்து வருகின்றனர். தொடர்ந்து வாரம் வாரம் வரும் விஜய் சேதுபதி வந்து நிகழ்ச்சி குறித்து மக்களிடையே வரவேற்பு இல்லை வெறுப்புதான் உள்ளது என்று போட்டியாளர்களிடையே நேரடியாக தெரிவித்தும் அதனை அவர்கள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனையே மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரமும் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசி வருகிறார்.
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 4-வது வாரத்திற்கான வீட்டுதல டாஸ்கில் பிரவீன் ராஜ் வெற்றிப்பெற்று வீட்டுதலையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்படி இந்த பொறுப்பு அவருக்கு கிடைத்த முதல் நாள் இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப் மாதிரி இருக்கும் என்று கூற அதனை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்ற பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உடை கொடுத்து பல டாஸ்குகளையும் வைத்தார். ஆனால் ஆர்மி கேம்ப் மாதிரி இருக்கும் என்று கூறிய வீட்டு தல பிரவீன் தனது பணியை சிறப்பாக செய்யவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.




வீட்டு தல பிரவீனை விமர்சிக்கும் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் இந்த வாரம் வீட்டு தலையாக இருந்த பிரவீன் எப்படி செயல்பட்டார் என்பது குறித்து விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த போட்டியாளர்கள் அவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்றும் வீட்டுல் உள்ள அனைவருக்கும் பொதுவானவராக செயல்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் வியானா பேசுகையில் தன்னிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து கூறியதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day28 #Promo5 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/1GI1245paE
— Vijay Television (@vijaytelevision) November 2, 2025
Also Read… பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்