சுந்தர் சி – ரஜினிகாந்தின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது தெரியுமா? கசிந்தது தகவல்!
Superstar Rajinikanth: இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி அடுத்ததாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைய இன்னும் சிறிது காலமே உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியகி வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ளதாக தற்போது தகவல்கள் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இந்த கூட்டணியில் வெளியாகும் படத்திற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் வேறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இவர்கள் கூட்டணி கடந்த 1997-ம் ஆண்டு அருணாச்சலம் படத்தில் நடைபெற்றது. இந்த கூட்டணி சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு அமைய உள்ளதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுந்தர் சி – ரஜினி படத்தின் அறிவிப்பு எப்போது தெரியுமா?
இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான அருணாச்சலம் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் படம் உருவாக உள்ளது குறித்து தகவல்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… AK 64 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
இணையத்தில் கவனம்பெறும் எக்ஸ் தள பதிவு:
#SundarC — #Rajinikanth Film Update
— Director Sundar C is set to collaborate with Superstar Rajinikanth for his next film. 🎬
— The official announcement of the project is likely to be made on November 7.
— The film is expected to be jointly produced by #KamalHaasan’s #RKFI… pic.twitter.com/uPyJdyPk9T— Movie Tamil (@_MovieTamil) November 2, 2025
Also Read… அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ



