Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kaantha: துல்கர் சல்மானின் காந்தா – ‘Rage of Kaantha’ பாடல் வெளியானது!

Rage of Kaantha Song: நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியிருப்பது காந்தா. இப்படம் வரும் 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், இப்படத்தின் 3வது பாடலான Rage of Kaantha வெளியாகியுள்ளது.

Kaantha: துல்கர் சல்மானின் காந்தா – ‘Rage of Kaantha’ பாடல் வெளியானது!
துல்கர் சல்மானின் காந்தா
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Oct 2025 17:41 PM IST

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் சிறந்த நடிகராக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவின் மூலம் ஹீரோவாக நுழைந்தாலும், தற்போது முழுவதுமாக தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) என்ற படமானது வெளியானது. இந்த படத்தை, சூர்யா46 (Suriya46) படம் இயக்கிவரும் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்தார். இந்த படமானது துல்கர் சல்மானுக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில் துல்கர் சல்மான் இணைந்த படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தை இவருடன் நடிகர் ராணாவும் (Rana) இணைந்து தயாரித்துள்ளார். இதில் துல்கருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashree Borse) நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான கிங்டம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காந்தா படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிய நிலையில் 3வது பாடலாக “Rage of Kaantha” லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் குறித்தான பதிவை துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட கூட்டணி… சூர்யாவின் 47வது படத்தில் இணையும் லோகா பட நடிகர்?

துல்கர் சல்மான் பகிர்ந்த காந்தா படத்தின் Rage of Kaantha பாடல் பதிவு :

காந்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்?

காந்தா படமானது கடந்த 1960 ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இது இயக்குநர் மற்றும் நடிகருக்கு இடையேயான போட்டி மற்றும் பிரச்சனைகள் தொடர்பான கதைக்களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மோகன்லாலின் மகள் நாயகியாகும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

இந்த படம் உண்மை சம்பவத்தைக் கொண்டு உருவாகியிருக்கும் நிலையில் நிச்சயம் மக்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு காந்தா படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 நவம்பர் 7 அல்லது 8ம் தேதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.