தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?
D 54 Movie: தனுஷ் நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் தேரே இஸ்க் மெய்ன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாக உள்ள 54-வது பக்குழு ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் (Actor Dhanush) தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மிகவும் பிசியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான இட்லி கடை படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது இந்தி சினிமாவில் உருவாகியுள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகை கிருத்தி சனோன் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்ததும் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.
தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை:
இந்த நிலையில் நடிகர் தனுஷின் 54-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் போர் தொழில் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இரண்டாவது படமே தனுஷை இயக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் எங்கள் “அன்பான” ரசிகர்கள் D54 படப்பிடிப்பு தளங்களிலிருந்து எந்த காட்சிகளையும் பகிராமல் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளது.
Also Read… நவம்பர் மாதம் இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறதா? லிஸ்ட் இதோ
D54 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We request our “D”ear fans to support us by not sharing any footage from the sets of #D54. Your cooperation means everything!
— Vels Film International (@VelsFilmIntl) November 5, 2025
Also Read… க்ரைம் த்ரில்லர் பிடிக்கும்னா அஞ்சாம் பாத்திரா படத்தை மிஸ் செய்யாதீர்கள்



