Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லாங் ட்ரைவ் போலாமா மாமாகுட்டி… லவ் டுடே வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

3 Years Of Love Today Movie : இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாக நடித்த படம் லவ் டுடே. இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

லாங் ட்ரைவ் போலாமா மாமாகுட்டி… லவ் டுடே வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
லவ் டுடேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Nov 2025 17:19 PM IST

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கோமாளி. இந்தப் படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் லவ் டுடே. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் நடிகராக அறிமுகம் ஆனார். மேலும் இது இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை இவானா நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரவீனா ரவி, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், அக்ஷயா உதயகுமார், பிராத்தனா நாதன், பரத், ஆதித்ய கதிர், அஜீத் காலிக், ஏ.யு.நவின் கிருபாகர், விஜய் வரதராஜ், குருபாய், அசார் அதீஃப், மாஸ்டர் ஆரவ், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

லவ் டுடே படத்தின் கதை என்ன?

பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா இருவரும் காதலித்து வருகின்றனர். காதலிக்கும் இரண்டு பேர் தங்களது காதலை வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து இவானா தந்தை சத்யராஜ் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்களின் மொபைல் போனை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றிக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல விசயங்கள் நடைபெறுகிறது. இதனை மிகவும் காமெடியாக காட்டியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இறுதியாக என்ன நடந்தது என்பது படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… AK 64 படத்தின் இணையும் முக்கிய நடிகர்? வைரலாகும் தகவல்

லவ் டுடே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கேரளாவின் 2024-ம் ஆண்டிற்கான மாநில விருதை வென்றது பிரேமலு படம்