Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேரளாவின் 2025-ம் ஆண்டிற்கான மாநில விருதை வென்றது பிரேமலு படம்

Premalu Movie Won State Award: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமலு. விமர்ச்னா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது 2025-ம் ஆண்டிற்கான கேரள அரசின் மாநில விருதை வென்றுள்ளது.

கேரளாவின் 2025-ம் ஆண்டிற்கான மாநில விருதை வென்றது பிரேமலு படம்
பிரேமலு படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 Nov 2025 00:01 AM IST

மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிரேமலு (Premalu Movie). இந்தப் படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை மமிதா பைஜுவிற்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது என்றே சொல்லலாம். தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி தமிழில் சமீபத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்த டியூட் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழிகளில் நடிகை மமிதா பைஜூ தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருவது போல மலையாள சினிமாவில் தொடர்ந்து நடிகர் நஸ்லேன் படங்களில் கமிட்டாகி நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படி அந்த ஒரே ஒரு பிரேமலு என்ற படத்தின் மூலம் இவர்கள் இருவரும் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2025-ம் ஆண்டிற்கான மாநில விருதை வென்றது பிரேமலு:

இந்த நிலையில் இன்று சினிமாவில் 2025-ம் ஆண்டிற்கான மாநில விருதை கேரள அரசு அறிவித்துள்ளது. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் என்று பல பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் முன்னணி வேடத்தில் நடித்த பிரேமலு படம் கேரள அரசின் மாநில விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

Also Read… மீண்டும் இணைந்தது சுந்தர் சி – விஷால் கூட்டணி… அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

நடிகர் நஸ்லேன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜேசன் சஞ்சய் முதலில் இயக்க ஆசைப்பட்டது அந்த பிரபல நடிகர்தான் – வைரலாகும் தகவல்